வடமாநில தொழிலாளி தற்கொலை?

பள்ளிபாளையத்தில் வடமாநில தொழிலாளி தூக்கில் தொங்கினார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;

Update:2022-11-02 01:14 IST

பள்ளிபாளையம்

பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை, வெள்ளி குட்டை அருகே வயல் காட்டில் சுமார் 55 வயது உடைய வட மாநில தொழிலாளி ஆண் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கினார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் வெப்படை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெப்படை போலீசார் வடமாநில தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்