தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பழனி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில், உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.;

Update:2023-09-12 03:30 IST

பழனி அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில், உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முன்னதாக பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் உதயக்குமார் தலைமை தாங்கி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலமானது அடிவாரம் ரோடு, மயில் ரவுண்டானா, திண்டுக்கல் ரோடு வழியாக சென்று மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் நிறைவு பெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆஸ்பத்திரி டாக்டர்கள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்