தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் 328 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்;

Update:2022-06-02 20:39 IST

தூத்துக்குடி:

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் 328 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சி முகாம்

தூத்துக்குடியில் 10 நாள் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு மற்றும் மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் ஆகியவை இணைந்து தருவை விளையாட்டு மைதானத்தில் இந்த பயிற்சி முகாமை நடத்துகின்றன.

பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பேட்ரிக் தலைமை தாங்கினார். மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழக தலைவர் சேவியர் ஜோதிசற்குணம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

328 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

இந்த முகாமில் 328 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வரும் 11-ந் தேதி வரை அடிப்படை விளையாட்டு திறன்கள், அடிப்படையில் ஏற்கனவே உள்ள தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுடன் சேர்த்து புதிய விளையாட்டுகளான கடற்கரை கபடி, கடற்கரை கைப்பந்து, கடற்கரை கால்பந்து மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழக துணைத்தலைவர் ஜெயகிருஷ்ணன், பொருளாளர் குமார் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்