சூராத்தம்மன் கோவில் தேரோட்டம்

குன்னத்தூர் கிராமத்தில் சூராத்தம்மன் கோவில் தேரோட்ட விழா நடந்தது.;

Update:2022-09-11 18:42 IST

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் குன்னத்தூர் கிராமத்தில் சூராத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான தேரோட்ட விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சூராத்தம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதே போன்று நல்லூர் கிராம ஊராட்சியில் கிராம தேவதையாக அருள்பாலித்து வரும் செல்லியம்மன் கோவில் கோவல் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்