சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி

சுவாமி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-24 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பர்வதவர்தினி அம்பாள் பல்வேறு அவதாரங்களில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.

இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து சாமி தங்க குதிரை வாகனத்திலும், மற்றும் அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மகர நோன்பு திடலுக்கு வந்தடைந்தனர்.

அங்கு சுவாமி அம்பாள் சுவாமி 4 முறை வில் மூலம் அம்பி எய்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் கோவிலின் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன், கவுன்சிலர் தில்லை புஷ்பம், பா.ஜ.க. நகர் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்்திரன், நகர் பொதுச்செயலாளர் முருகன் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்