தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளிக்குரூ.6 லட்சத்தில் மேஜைகள்வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Update:2023-07-17 01:00 IST

தர்மபுரி:

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் வசதிக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள மேஜை மற்றும் பெஞ்சு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். விழாவில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளுக்கு மேஜை மற்றும் பெஞ்சு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் சுருளிராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், தகடூர் தமிழன், நகர நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்