உளுந்தூர்பேட்டையில் தாசில்தாா் பொறுப்பேற்பு
உளுந்தூர்பேட்டையில் புதிய தாசில்தாா் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை தாசில்தாராக பணியாற்றி வந்த மணிமேகலை இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக பணியாற்றி வந்த ராஜு உளுந்தூர்பேட்டை தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அங்கிருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் புதிய தாசில்தாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.