‘சீமானும், விஜய்யும் பா.ஜ.க.வின் கூலிப்படைகளாக மாறிவிட்டனர்' - வன்னி அரசு

சீமான் பேசும் அரசியல் இந்து ராஷ்டிரத்தின் இன்னொரு வடிவம் என வன்னி அரசு விமர்சித்துள்ளார்.;

Update:2025-12-28 13:50 IST

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“நீதிமன்றங்கள் முழுக்க ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டன. தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகள் பா.ஜ.க.வின் கூலிப்படைகளாக மாற்றப்பட்டு விட்டன.

அரசியல் கட்சிகளாக செயல்பட்டு வரும் திரைத்துறையை சார்ந்த சீமானும், விஜய்யும் சனாதனக் கருத்தை ஏற்றுக்கொண்டு பா.ஜ.க.வின் கூலிப்படைகளாக மாறிவிட்டனர். அதனால்தான் பிராமண கடப்பாறையாக மாறி பூணூலாக தொங்கி நத்திக் கிடக்கிறது சீமான் என்னும் சனாதனி.

தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்து இந்து ராஷ்டிரத்தை கட்டமைப்பதுதான் பார்ப்பனியத்தின் இலக்கு. அதன் முன்னோட்டமாகத்தான், காஷ்மீரிகளின் தேசிய இன அடையாளத்தை அழித்தொழிக்கும் விதமாக 370 பிரிவை ரத்து செய்தது பா.ஜ.க. அரசு.

நாகலாந்தில் போராடும் நாகா சோசலிச குழுக்கள் போன்ற அமைப்புகளை ஒடுக்கி வருகிறது. மணிப்பூரில் குக்கி, மெய்தி என இரு இனக்குழுக்களிடையே மோதலை உருவாக்குவது. இவை எல்லாமே ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்திட்டம்.

தமிழர்களின் தேசிய இன அடையாளத்தை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்கவும் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்னெடுப்பது ஒன்றே உண்மையான தமிழ் தேசியமாகும். ‘போலியாக தமிழ்த்தேசியம் பேசினால் பேசிவிட்டு போகட்டும்’ என பா.ஜ.க.வோ இந்திய உளவுத்துறையோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும். தனித்தமிழ்நாடு கோரிக்கையை முழங்கினால் வேடிக்கை பார்க்காது. UAPA சட்டம் பாயும்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் கையடக்கமாக இருந்து கொண்டு என்ன வேண்டுமானால் பேசாலாம். அப்படித்தான் சீமான் பேசுகிற அரசியல். அது இந்து ராஷ்டிரத்தின் இன்னொரு வடிவம். மேதகு பிரபாகரன் பிள்ளை என மூச்சுக்கு மூச்சு பேசும் சீமானுக்கு துணிச்சல் இருந்தால், மேதகு பிரபாகரன் போல, இந்தியாவில் தனித்தமிழ்நாடு கோர முடியுமா? அப்போது தெரியும் சீமான் மேதகு பிரபாகரன் பிள்ளையா? ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளையா? என்று.

தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கிய தந்தை பெரியாரை ஏற்காமல், “வேதம் உடையதிந்த நாடு-நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு! சேதமில்லாத இந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என இந்துஸ்தானத்தை கேட்ட பாரதியை கொண்டாடுவதிலிருந்தே தெரியவில்லையா சீமான் யாருடைய பிள்ளை என்று?”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்