தலகொண்டல மாரியம்மன் கோவில் திருவிழா

சிட்லகாரம்பட்டி கிராமத்தில் தலகொண்டல மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினர்.

Update: 2022-06-01 19:30 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே சிட்லகாரம்பட்டியில் தலகொண்டல மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. ஒன்னப்பகவுண்டனள்ளி, தட்டாரப்பட்டி, வேலம்பட்டி, சிட்லகாரம்பட்டி கிராமங்கள் வழியாக சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. 4 கிராமங்களில் இருந்தும் பெண்கள் மாவிளக்கு எடுத்து கரகம் ஆடி வந்தனர். பின்னர் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) மாலை தல கொண்டல மாரியம்மன் கோவில் முன்பு எருது ஆட்டம் நடக்கிறது. இதில் 4 கிராமங்களில் இருந்தும் காளைகள் பங்கேற்கின்றன. ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்