தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு

திருத்துறைப்பூண்டியில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு

Update: 2023-10-15 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வை ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். தமிழ் மொழி இலக்கிய திறனாய்வை பள்ளி மாணவ-மாணவிகள் மேம்படுத்தி கொள்ளும் வகையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு, தேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2023-24-ம் ஆண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடந்தது. இத்தேர்வானது திருத்துறைப்பூண்டியில் 2 தேர்வு மையங்களிலும், முத்துப்பேட்டையில் ஒரு தேர்வு மையத்திலும் நடந்தது. இந்த தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இதேபோல் இத்தேர்வானது திருவாரூர் மாவட்டம் முழுவதும் 15 மையங்களில் நடந்தது. இத்தேர்வை 5 ஆயிரத்து 332 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் 1500 மாணவ-மாணவிகள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தலா ரூ.1500 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்