"தமிழ்நாடு திருநாள்" சிறப்பு கருத்தரங்கு

சேலத்தில் தமிழ்நாடு திருநாள் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

Update: 2022-07-18 19:52 GMT

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிமேடு அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நேற்று "தமிழ்நாடு திருநாள்" சிறப்பு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கலை பண்பாட்டுத் துறையின் அரசு இசைப் பள்ளி சார்பில் இயல், இசை, நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசுகையில், கல்வி பயிலும் கால கட்டங்களில் மாணவர்கள் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும், என்றார்.

இதனைத் தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழக தமிழ்த் துறை பாடத்திட்ட வல்லுனர் குழு உறுப்பினர் தாரை குமரவேல் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு நாள் விழா குறித்து சிறப்புரை ஆற்றினர். முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வரையப்பட்டிருந்த கோலங்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் ரமா, தமிழ்த்துறை தலைவர் ரங்கநாயகி உள்பட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்