நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-10-01 01:45 IST

தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஊட்டி ஏ.டி.சி. திடலில் கொட்டும் மழையிலும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது காவிரி நீரை பெற்று தர மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும், கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் பொன் மோகன் தாஸ், நிர்வாகிகள் விஜயன், கேத்தீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்