முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருப்பத்தூர் பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.;

Update:2023-08-17 00:14 IST

ஆடி அமாவாசையை இந்துக்கள் புனிதமான நாளாக கடைபிடிக்கின்றனர். இதனையொட்டி இந்துக்கள், இறந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவர்.

அதன்படி திருப்பத்தூர் பெரியகுளம் நஞ்சுண்டேஸ்வரர், சின்ன குளம், ரேணுகா பரமேஸ்வரி ஆலயம் மற்றும் தர்ம வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பாலாற்று பகுதிகளில் உள்ள கோவில்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர், இதனால் அனைத்து கோவில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்