காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

காவிரி கரையில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்

Update: 2022-09-25 18:45 GMT

புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை தினத்தில், இறந்த முன்னோர்களை நினைத்து நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதன் அடிப்படையில் புரட்டாசி அமாவாசை தினமான நேற்று மயிலாடுதுறை துலா கட்ட காவிரி ஆற்றில் அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி கரையில் அமர்ந்து வாழை இலையில் பசும்பால், தேன், நெய், எள் மற்றும் காய்கறிகள், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றை படையலிட்டு முன்னோர்களை நினைவு கூர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீர்நிலைகளில் பொதுமக்கள் ஒன்றுகூட அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் நேற்று ஏராளமான பொதுமக்கள் காவிரி கரையில் திரண்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அவர்கள் காவிரியின் தென்கரை பகுதியில் தர்ப்பணம் ெகாடுத்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்