சேலம் ரெயில் நிலையத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வினோத்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-07-22 19:30 GMT

சூரமங்கலம்:-

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 4-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சிஅம்மன் நகரை மணி மகன் வினோத்குமார் (வயது 30) என்பது தெரிய வந்தது.

அவரிடம் இருந்த பையை திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வினோத்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அவர், எங்கிருந்து கொண்டு வந்தார். எங்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்