வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை;

Update:2023-05-07 00:45 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் விமல் பிரபு(வயது 24). இவர் என்ஜினீயரிங் படித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். இவருக்கு குடிபழக்கம் உள்ளதால் அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தாயிடம் சென்று ரூ.2 லட்சம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த விமல்பிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்