பஸ் மோதி வாலிபர் சாவு

நெல்லையில் பஸ் மோதி வாலிபர் இறந்தார்.;

Update:2023-05-17 01:49 IST

நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நேற்று இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்