மது போதையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி சாவு

மது போதையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி இறந்தார்.;

Update:2023-01-17 00:41 IST

நாகர்கோவில்:

நெல்லை மாவட்டம் பணகுடி ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தின் பக்கவாட்டில் வாலிபர் ஒருவர் பிணம் கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயில்வே போலீசார் நடத்்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் பணகுடி நெறுஞ்சிகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 23) என்பதும் மது போதையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்