கோவை
கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாமுத்து (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அய்யாமுத்து படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரான கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அப்துல் காதர் என்பவரை கைது செய்தனர்.