பாச்சல் கிராமத்தில் 50 ஆண்டுகளாக பூட்டி கிடந்தஜெயன்கொண்டான் நாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Update:2023-03-07 00:30 IST

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே பாச்சல் கிராமத்தில் பழமைவாய்ந்த ஜெயங்கொண்டான் நாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் வல்வில் ஓரி மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோவில் உள்ள ஜெயன்கொண்டான் நாதர் சாமியை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக கோவில் பராமரிப்பு இன்றி பூட்டிய கிடந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் திறந்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் தூய்மை செய்தனர். பின்னர் ஜெயங்கொண்டான் நாதருக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்