வீரசக்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

வீரசக்தி விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.;

Update:2023-07-10 01:00 IST

மன்னார்குடி நடுவாணிய தெருவில் பழமையான வீரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குடகுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 7-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலை 3-ம் கால யாகசாலை பூஜைக்கு பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை கோவில் விமான கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு நடத்தி வைத்தனர். பின்னர் வீரசக்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்