ஆதிவைத்தியநாதசாமி கோவில் குடமுழுக்கு

ஆதிவைத்தியநாதசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2023-08-20 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் பாலாம்பிகா உடனாகிய ஆதிவைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இங்கு பஞ்சபாண்டவர்கள் வழிபட்டு வரம் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இக்கோவிலில் ேநற்று குடமுழுக்கு விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 18-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாக சாலை பூைஜகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு கோவில் விமான கலசத்தில் ஊற்றப்பட்டது. இதையடுத்து சாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவினை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்