கோபால்பட்டி அருகே கணவாய் கருப்புசாமி கோவிலில் ஆடி உற்சவம்
கோபால்பட்டி அருகே கணவாய் கருப்புசாமி கோவிலில் ஆடி உற்சவம் தொடங்கியுள்ளது.;
கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியில் பிரசித்தி பெற்ற கணவாய் கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத உற்சவம், கடந்த 4-ந்தேதி சாமி சாட்டுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதன்படி, இன்று கருப்புசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அப்போது சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி கிராம தெய்வங்களுக்கு பழம் படைத்தல் மற்றும் ஆடுகளை பலியிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.