ஜவுளிக்கடை காவலாளி சாவு

கட்டிலில் இருந்து கீழே விழுந்து ஜவுளிக்கடை காவலாளி சாவு

Update: 2023-03-05 19:00 GMT

திருவட்டார்,

வேர்க்கிளம்பி அருகே உள்ள மணலிக்கரை ஆண்டாம் பாறையைச்சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது61). இவர் வேர்க்கிளம்பி சந்திப்பில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆண்டாம்பாறையில் மகளின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். கிறிஸ்துதாசுக்கு வலிப்பு நோய் உள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்றார்.

நேற்று காலையில் அவரது மகள் காபி கொடுப்பதற்காக கிறிஸ்துதாசின் அறைக்கு சென்றார். அப்போது கிறிஸ்துதாஸ் கட்டிலில் இருந்து கீழே விழுந்த நிலையில் ரத்த காயத்துடன் கிடப்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்