ஜாமீனில் வந்தவர் திடீர் தலைமறைவு

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் திடீர் தலைமறைவு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு

Update: 2022-09-08 16:30 GMT

ராமநத்தம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கிளியப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூமாலை மகன் முத்துசாமி. இவரை போக்சோ வழக்கில் வேப்பூர் போலீசார் கைது செய்து கடலூர் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் கொரோனா காலத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முத்துசாமி கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கடந்த 21-10-2020 அன்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் வேப்பூர் போலீசார் முத்துசாமியை வலைவீசி தேடி வந்தனர். ஆனால் முத்துசாமி கிளியப்பட்டு கிராமத்தில் வசிக்கவில்லை, அவர் தலைமறைவாகிவிட்டார் என கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று கோர்ட்டில் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து குற்ற விசாரணை முறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து முத்துசாமியை வருகிற 16-ந் தேதிக்குள் ஆஜர் படுத்த வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதை அடுத்து கோர்ட்டின் இந்த உத்தரவை முத்துசாமியின் வீட்டில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ஒட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்