மந்தமாக நடைபெறும் பாலம் அமைக்கும் பணி

பிரம்மதேசம் அருகே ஓடையில் பாலம் அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. எனவே போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க பருவமழை தொடங்குவதற்குள் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-24 18:45 GMT

பிரம்மதேசம், 

பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் தங்களின் தேவைக்காக திண்டிவனம், மரக்காணம், சென்னை போன்ற நகர்புறங்களுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், பாலம் பலத்த சேதமடைந்தது. இதனால் அந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பாலத்தை இடித்து விட்டு அதன் அருகில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய பாலம் இடிக்கப்பட்டு அங்கு ரூ.35 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

மேலும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக அங்கு தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே பாலப்பணி மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பெய்த மழையால் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை பலத்த சேதமடைந்தது. இதனால் பொதுமக்கள் அந்த சாலை வழியாக செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால், ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அபாயம் உள்ளது. இதனால் அங்கு முற்றிலும் போக்குவரத்து பாதிப்பு எற்பட்டு பொதுமக்கள் அவதி அடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சொரப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்