தைலமரத்தை வெட்டி கடத்த முயன்ற கவுன்சிலரின் கணவருக்கு வலைவீச்சு

ஒடுகத்தூர் அருகே தைலமரத்தை வெட்டி கடத்த முயன்ற கவுன்சிலரின் கணவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.;

Update:2023-10-25 23:28 IST

ஒடுகத்தூர் பேரூராட்சி பெண் கவுன்சிலர் ஒருவருக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. இந்தநிலையில், கவுன்சிலரின் கணவர் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று வனத்துறைக்கு சொந்தமான தைலமரத்தை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்றனர்.

அவர்கள் வருவதை அறிந்ததும் கவுன்சிலரின் கணவர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அதைத்தொடர்ந்து அங்கு வெட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 டன் எடை கொண்ட மரத்தை வனத்துறையினர் கைப்பற்றினர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலரின் கணவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்