பா.ஜ.க.வின் புதிய தேசிய செயல்தலைவர் நாளை மறுநாள் தமிழ்நாடு வருகை

சென்னையில் இருந்து நிதின் நபின் புதுச்சேரிக்கு செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-18 18:47 IST

சென்னை,

பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக பீகார் மாநில பொதுப்பணித்துறை மந்திரி நிதின் நபின் (வயது 45) அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நிதின் நபின் நாளை மறுநாள் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார் என பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயபிரகாஷ், பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் நிதின் நபின் முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு நாளை மறுநாள் வர உள்ளார் என்று தெரிவித்தார். சென்னை விமான நிலையத்திற்கு வரும் நிதின் நபின், அங்கிருந்து புதுச்சேரிக்கு செல்ல உள்ளார் என்று ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்