சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
திருக்கடையூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
திருக்கடையூர்:
திருக்கடையூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த சாலை
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
தடுமாறி விழும் வாகன ஓட்டுகள்
மேலும், மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் அந்த சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.இந்த சாலையில்செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர். சேதமடைந்துள்ள சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இந்த சேதமடைந்த சாலையால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.