யூ.ஜி.சி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

யூ.ஜி.சி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-22 15:09 GMT

புதுடெல்லி,

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு தேர்வுகளும் ஒன்றாக இந்த முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் கடந்த 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தேர்வர்கள் தரப்பில் எழுந்த கோரிக்கையை ஏற்று, வரும் 30-ந் தேதி வரை யூ.ஜி.சி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்