செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் ராட்சத பலூன்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ராட்சத பலூன் சேலத்தில் பறக்கவிடப்பட்டது.;

Update:2022-07-23 02:14 IST

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ராட்சத பலூன் பறக்க விட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காந்தி ஆகியோர் பறக்கவிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்