வன்னியர் சங்க மாவட்ட தலைவரை கத்தியால் குத்தியவர் கைது

முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க மாவட்ட தலைவரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-09-26 22:58 IST

திருவண்ணாமலை கிளிப்பட்டு கெங்கையம்மன் கோவில் தெரு மேல்குன்னுமுறிஞ்சி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 37), வன்னியர் சங்க மாவட்டத் தலைவர்.

இவருக்கும் வேடந்தவாடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ற காங்கேயன் (32) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை பெரியசாமி மோட்டார் சைக்கிளில் சாரங்கபாணி (25) என்பவருடன் மங்கலம் அடுத்த ஆர்ப்பாக்கம் கூட்ரோடு அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சுரேஷ் பெரியசாமியை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். பின்னர் அவர் கல்லால் பெரியசாமியை அடித்தும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதனை தடுக்க சென்ற சாரங்கபாணியையும் அவர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்