எந்திரம் மூலம் குறுவை அறுவடை பணி மும்முரம்

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் எந்திரம் மூலம் குறுவை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-09-21 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் எந்திரம் மூலம் குறுவை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோடை சாகுபடி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சுமார் 16 ஆயிரத்து 500 ஏக்கரில் கோடை சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி முடித்தனர். அதன் பிறகு சுமார் 34 ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன்படுத்தி சிலர் முன் கூட்டியே பல்வேறு ரக நெல்களை சாகுபடி செய்தனர்.

சில விவசாயிகள் தாமதமாக கொஞ்சம், கொஞ்சமாக விவசாய பணியை தொடங்கினர். முன் கூட்டியே குறுவை சாகுபடி செய்த சித்தமல்லி, பூவனூர், தட்டித்தெரு பகுதி, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதிர்ந்து பழுத்த நெல் மணிகளை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு மாதத்திற்குள்...

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தாமதமாக தொடங்கிய குறுவை சாகுபடி வயல்களில் தற்போது நெல் மணிகள் முதிர்ந்தும், கதிர்கள் மட்டமாக ஒத்தும் வந்து கொண்டிருக்கிறது. இந்த நெல் கதிர்கள் ஒரு மாதத்திற்குள் அறுவடை தொடங்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த அறுவடையும் முடிந்த உடன் அதே 34 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும், ஆற்று நீரை பயன்படுத்தி சுமார் 10 ஆயிரம் ஏக்கரி சம்பா சாகுபடி பணிகளும் தொடங்க உள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்