கடையில் இருந்த பொருட்கள்தீயில் எரிந்து சேதம்; முதியவர் கைது

கடையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆனது. இதுதொடர்பாக முதியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-04-16 01:47 IST

பணகுடி:

பணகுடியை அடுத்த ரெகுநாதபுரத்தில் சரஸ்வதி என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த நாராயணன் (வயது 64) அந்த பெட்டி கடைக்கு அருகே உள்ள முள்செடியில் தீவைத்ததாக கூறப்படுகிறது. காற்று வேகமாக வீசியதால் தீ அருகில் உள்ள பெட்டிக்கடைக்கும் பரவியது. இதில் கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்