அண்ணனை தாக்கியவர் கைது

அண்ணனை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-09-27 00:46 IST

பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 67). இவரது தம்பி சுந்தரம் (65). இவர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுந்தரம் ஆத்திரம் அடைந்து கோவிந்தனை கீழே தள்ளி உள்ளார். இதில் காயம் அடைந்த கோவிந்தன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி சுந்தரத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்