காசி சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியவர் சாவு - நெல்லையை சேர்ந்தவர்

காசி சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பியவர் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-11-29 07:46 GMT

சென்னையிலிருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் காசியிலிருந்து 216 பேர் கொண்ட குழு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. ரெயிலில் இருந்து ஒவ்வொரு பயணியாக இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பயணி ஒருவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவ உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில் மயங்கி விழுந்து இறந்தவர் நெல்லை வள்ளியூரை சேர்ந்த செல்வகுமார் (வயது54) என்பது தெரியவந்தது. இவர் காசி தமிழ் சங்கத்தில் கலந்துகொண்டுவிட்டு நெல்லை செல்வதற்காக சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்