ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.;

Update:2023-02-13 00:17 IST

ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்தவர் ராமு மகன் வீராச்சாமி (வயது 32). பட்டதாரியான இவர், புதுக்கோட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரும் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தெற்கு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் முருகஜோதி (23) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இருவரும் கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இரு குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் இரு குடும்பத்தினரிடம் சமரசம் பேசி மணமக்களை அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்