டீக்கடை தீயில் எரிந்து நாசம்

டீக்கடை தீயில் எரிந்து நாசமானது.;

Update:2023-03-28 01:25 IST

துவரங்குறிச்சி அருகே உள்ள அக்கியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் அக்கியம்பட்டி அண்ணாநகரில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் நேற்று இரவு குளிர்சாதன பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென கடை தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். இதனிடையே கடையின் உள்ளே கியாஸ் சிலிண்டர்கள் இருப்பதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு சிலிண்டர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக வெளியே எடுத்து வந்து குளிர்வித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்