ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

ஆரணி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-02-26 17:14 IST

ஆரணி

காட்பாடி- திருவண்ணாமலை மார்க்கமாக உள்ள ெரயில் பாதையில் ஆரணியை அடுத்த குன்னத்தூர் ெரயில்வே கேட் அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 17-ந் தேதி ெரயிலில் இருந்து தவறி விழுந்து அடிபட்டு கிடந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காட்பாடி ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்