வாலிபர் திடீர் சாவு

வாலிபர் திடீர் சாவு

Update: 2023-01-31 18:45 GMT

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் கிட்டங்கி தெருவைச் சேர்ந்தவர் பிரபு (வயது 28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொட்டாரம் பகுதியில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் வெகுநேரம் ஆகியும் பிரபு வெளியே எழுந்்து வரவில்லை. படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பிரபு அசைவற்ற நிலையில் கிடந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரபு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவின் திடீர் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்