மின் ஒயர் திருடிய வாலிபர் பிடிபட்டார்

உளுந்தூர்பேட்டை அருகே மின் ஒயர் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-05-30 00:15 IST

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி மின் மோட்டார் ஒயர்கள் அடிக்கடி திருடு போனது. இதை தடுக்க அப்பகுதி இளைஞர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கிராமத்தின் எல்லைப்பகுதியில் உள்ள மின்மோட்டாரில் இருந்து மின் ஒயரை மர்மநபர் ஒருவர் திருடினார். இதைபார்த்த அப்பகுதி இளைஞர்கள், அந்த மர்மநபரை பிடித்து உளுந்தூர்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிடிபட்ட மர்மநபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் சந்திரகுமார் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 கிலோ மின் ஒயரை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்