ஓலை வீடு எரிந்து நாசம்

ஆரணி அருகே ஓலை வீடு எரிந்து நாசமாயின.;

Update:2023-06-05 22:21 IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரது மனைவி கோமதி. இவர், தனது ஓலை வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்யும் போது, திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் தண்ணீர் பீய்ச்சு அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. 

Tags:    

மேலும் செய்திகள்