டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
ஓச்சேரி அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சி கருணாகுளம் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50), டிராக்டர் டிரைவர்.
இவர் இன்று பெரும்புலிப்பாக்கத்தில் இருந்து தண்ணீர் டேங்க் டிராக்டரில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு காவேரிப்பாக்கம் சென்று கொண்டிருந்தார்.
ஓச்சேரி அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள களத்தூர் சந்திப்பு பகுதியில் டிராக்டர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.