மாடியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

ஊட்டியில் மாடியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலியானார்.;

Update:2022-08-31 20:52 IST
மாடியில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டி எம்.எஸ்‌. லைன் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 49), வியாபாரி. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ் ஐந்து லாந்தர் பகுதியில் முதல் மாடியில் இருந்து குறுகிய பாதை வழியாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அவ்வாறு வரும்போது நிலை தடுமாறியதால், மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இரவு நேரம் என்பதால் யாரும் கவனிக்கவில்லை. நேற்று காலையில் அவர் இறந்து கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்