அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

கோவில் உண்டியல் பணத்தை எடுக்க சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

Update: 2023-07-27 08:26 GMT

பள்ளிப்பட்டு. 

பள்ளிப்பட்டு அருகே பெருமாநல்லூர் கிராமத்தில் ஓசூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணத்தை எடுப்பதற்காக அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளர்கள் கலைவாணர் மற்றும் உஷா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அங்கு சென்றனர். ஆனால் அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு இந்த உண்டியல் பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என தடுத்தனர்.

தங்கள் கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் ரூ.12 லட்சம் செலவில் நடத்தியதாகவும் இந்த பணத்தை கொடுத்துவிட்டு நீங்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் கிராம மக்களுடன் போலீசாரும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உண்டியல் காணிக்கை பணத்தை எடுக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்