மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.;
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே உள்ள விரிவிளையை சேர்ந்தவர் சுனில் (வயது40), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வயலங்கரை பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சுனில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள