காஞ்சீபுரம் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்

அரியலூர் மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-12-11 16:20 IST

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை எஸ்.சி/எஸ்.டி. வழக்கில் கைது செய்ய காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டி.எஸ்.பி. சங்கர் கணேஷின் கைதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு, மாவட்ட நீதிபதி செம்மல் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

நீதிபதி செம்மல் தற்போது அரியலூர் மாவட்டத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் அல்லி இன்று உத்தரவிட்டுள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்