பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-12-11 17:31 IST

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை மறுநாள் (13.12.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

குன்றத்தூர்: திருநீர்மலை பிரதான சாலை, மஹாநகர், டெம்பிள் வேவ் குன்றத்தூர், காவலர் குடியிருப்பு, சரண்யாநகர், ஏஆர்.எடைமேடை, ஷர்மாநகர், மேத்தாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்