கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
வடக்கன்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.;
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அருகே உள்ள தெற்கு பெருங்குடி உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அருள்குமார் (வயது 18). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அப்பகுதியின் காட்டு பகுதிக்குள் கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து தண்ணீர் மூழ்கி அருள்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.