செல்போன் கடையில் திருட்டு
தூத்துக்குடி அருகேசெல்போன் கடையில் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.;
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 32). இவர் புதுக்கோட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றாராம். நேற்று முன்தினம் காலையில் கடையை திறக்க வந்த போது, கடையின் முன்பக்க ஷட்டரில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமரன் கடைக்குள் சென்று பார்த்து உள்ளார். அப்போது கடையில் இருந்த 7 செல்போன்கள், ஹெட்போன், சார்ஜர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.